ஒரு தோட்டத்தில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் ஒருவரையொருவர் காதலித்துக் கொண்டிருந்தன.
ஒரு நாள் அவர்கள் இருவரும் ஒளிந்து விளையாட (ஹைடு அன்டு சீக்) முடிவு செய்தனர். விளையாடி கொண்டிருக்கும் போது ஆண் வண்ணத்துப்பூச்சி பெண் வண்ணத்துப்பூச்சியிடம் கேட்டது. நம்மி்ருவருக்கும் மத்தியில் போட்டி வைக்கலாமா? என்று கேட்டது. மேலும் யார் நாளை காலையில் முதலாவதாக இந்த பூவில் வந்து அமர்கிறாரோ அவர் இரண்டாவதாக அமர்பவரை விட அதிகமாக நேசிக்கின்றார் என்று அர்த்தம் என்றும் கூறியது.
பெண் வண்ணத்துப்பூச்சியும் அதற்கு ஒப்புக்கொண்டது.
மறுநாள் காலையில் ஆண் வண்ணத்துப்பூச்சி சீக்கிரமாக பூ இருக்கும் இடத்திற்கு வந்தது. பூ இன்னும் திறக்காமல் மூடி இருப்பதை பார்த்துவிட்டு பூ திறக்கும் வரை காத்திருந்தது.
பூ திறந்தபிறகு அது கண்ட காட்சி அதனை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது கண்ட காட்சி முதல் நாள் இரவிலேயே அந்த பூவுக்குள் பெண் வண்ணத்துப்பூச்சி அமர்ந்து விட்டதினால் விடியும் வரை அந்த பூவும் மூடியிருந்ததால் மூச்சு திணறி அதனுள்ளேயே இறந்துவிட்டது.
இந்தக் கதையின் மூலம் நாம் பெறும் படிப்பினை என்ன:
1. போட்டி நடத்துவதற்கு முன் அப்போட்டியின் சாதக, பாதகங்களை முதலில் ஆராயந்து செயல்படவேண்டும்.
2. சாதகங்களைவிட பாதகங்கள் அதிகமாக இருக்கும் பொருட்டு அது போன்ற போட்டிகளை நடத்தக் கூடாது.
3. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.
வர வர காதல் கசக்குதய்யா...
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
தமிழ்மணத்துக்கு வருக. அவர்களுடைய உதவிப் பக்கம் சென்று, உங்கள் பதிவுகளையும் மறுமொழிகளையும் தமிழ்மணம் திரட்டுமாறு ஏற்பாடு செய்யுங்கள் அவசியம்.
இளவரசன் என்று சொல்லிவிட்டு, profile-இல் இளவரசி படம் போட்டிருக்கிறீர்களே? :-)
நல்ல விஷயங்களை தொடர்ந்து எழுதுங்க....!!!!
வரவேற்கிறேன் இணைய உலகுக்கு !!
//தமிழ்மணத்துக்கு வருக. அவர்களுடைய உதவிப் பக்கம் சென்று, உங்கள் பதிவுகளையும் மறுமொழிகளையும் தமிழ்மணம் திரட்டுமாறு ஏற்பாடு செய்யுங்கள் அவசியம். //
அன்புள்ள சேதுக்கரசி,
நன்றி
பீட்டா பிளாக்கரில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன். தமிழ்மணத்தின் உதவியினை நாடியுள்ளேன். விரைவில் எனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.
//இளவரசன் என்று சொல்லிவிட்டு, profile-இல் இளவரசி படம் போட்டிருக்கிறீர்களே? :-) //
ஹிஹி :-)
//நல்ல விஷயங்களை தொடர்ந்து எழுதுங்க....!!!!
வரவேற்கிறேன் இணைய உலகுக்கு !! //
நன்றி செந்தழல் ரவி அவர்களே!
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதைத்தான் காட்டுகிறது.
Post a Comment