Sunday, December 17, 2006

ஒரு அருமையான கதை!

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள். அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் . அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள் அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள் அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள். இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள். இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் "அன்பு", அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? நான் அழைத்தது அன்பை மட்டு்ம் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!!

இது எனக்கு email மூலமாக வந்தது. அதை முடிந்தவரை தமிழ் படுத்தி தந்திருக்கிறேன்.

Wednesday, December 06, 2006

காதல்

ஒரு தோட்டத்தில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் ஒருவரையொருவர் காதலித்துக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அவர்கள் இருவரும் ஒளிந்து விளையாட (ஹைடு அன்டு சீக்) முடிவு செய்தனர். விளையாடி கொண்டிருக்கும் போது ஆண் வண்ணத்துப்பூச்சி பெண் வண்ணத்துப்பூச்சியிடம் கேட்டது. நம்மி்ருவருக்கும் மத்தியில் போட்டி வைக்கலாமா? என்று கேட்டது. மேலும் யார் நாளை காலையில் முதலாவதாக இந்த பூவில் வந்து அமர்கிறாரோ அவர் இரண்டாவதாக அமர்பவரை விட அதிகமாக நேசிக்கின்றார் என்று அர்த்தம் என்றும் கூறியது.

பெண் வண்ணத்துப்பூச்சியும் அதற்கு ஒப்புக்கொண்டது.

மறுநாள் காலையில் ஆண் வண்ணத்துப்பூச்சி சீக்கிரமாக பூ இருக்கும் இடத்திற்கு வந்தது. பூ இன்னும் திறக்காமல் மூடி இருப்பதை பார்த்துவிட்டு பூ திறக்கும் வரை காத்திருந்தது.

பூ திறந்தபிறகு அது கண்ட காட்சி அதனை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது கண்ட காட்சி முதல் நாள் இரவிலேயே அந்த பூவுக்குள் பெண் வண்ணத்துப்பூச்சி அமர்ந்து விட்டதினால் விடியும் வரை அந்த பூவும் மூடியிருந்ததால் மூச்சு திணறி அதனுள்ளேயே இறந்துவிட்டது.

இந்தக் கதையின் மூலம் நாம் பெறும் படிப்பினை என்ன:

1. போட்டி நடத்துவதற்கு முன் அப்போட்டியின் சாதக, பாதகங்களை முதலில் ஆராயந்து செயல்படவேண்டும்.

2. சாதகங்களைவிட பாதகங்கள் அதிகமாக இருக்கும் பொருட்டு அது போன்ற போட்டிகளை நடத்தக் கூடாது.

3. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.

வர வர காதல் கசக்குதய்யா...

Wednesday, February 01, 2006

மனிதனை மனிதன் சாப்பிடுறான்டா

ஜெர்மனியிலுள்ள ஃபிரான்க்போர்ட் நீதிமன்றத்தில் மறுவிசாரணையின் போது ஜெர்மனைச் சார்ந்த ஆர்மின் மீவ்ஸ் (Armin Meiwes) மனிதனை சிறு சிறு துண்டாக வெட்டி கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன்னுடைய வீட்டில் வைத்து மனித மாமிசத்தை சாப்பிட்டு வந்ததை ஒப்புக்கொண்டான்.

44 வயதான ஆர்மின் மீவ்ஸ் தனது வாக்குமூலத்தில் ஒரு மனிதனுடைய ஆணுறுப்பை அவனுடைய அனுமதியுடன் வெட்டியதாக கூறினான். "நான் அவனை சாப்பிடத்தான் நினைத்தேன் அவனை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை" என்றும் அவன் கூறினான். இந்த செய்தி ஜெர்மனியிலுள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த மாபாதக செயலைச் செய்த இக்கொடியவனுக்கு ஜனவரி 2004-ல் உயர் நீதிமன்றம் எட்டரை ஆண்டு காலம் சிறை தண்டனை என தீர்பளித்திருந்ததை இலேசான தண்டனையாக கருதி உச்ச நீதி மன்றம் மரண தண்டனையை விதித்துள்ளது.

இந்த சம்பவத்தைப்பற்றி விசாரணை செய்யும் போது, 43 வயதான பொறியியலாளர் பெர்ண்ட் ஜீர்ஜன் பிராண்ட்ஸ் என்பவனுடன் இணையத்தின் தகவல் பரிமாற்றத்தின் (chatting) மூலம் ஆர்மின் மீவ்ஸ் தொடர்பு கொள்ளும் போது பிராண்ட்ஸ் தன்னை கொல்லும்படி கேட்டுக் கொண்டதாகவும் அவன் கூறுகின்றான்.

பிராண்ட்ஸ், மீவ்ஸ்க்கு தட்டச்சு செய்யும் போது "நீ உண்மையாகவே அதில் சிரியஸாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன் ஏனென்றால் நிஜமாகவே அது எனக்கு வேண்டும்" என்று எழுதினான். மார்ச் 2001ல் மீவ்ஸின் சொந்த ஊரான ரோடன்பர்க்கிற்கு (Rotenburg) ஒரு வழிப்பாதை (One Way) ரயில் கட்டணத்தை எடுத்துக்கொண்டு சென்றான்.

அன்றிரவு பிராண்ட்ஸ் தூக்க மாத்திரைகளையும், மதுபானங்களையும் அருந்திவிட்டு மிகவும் போதையுடன் இருந்தான். அப்போது மீவ்ஸ் அவனுடைய ஆணுறுப்பை வேட்டி துண்டு துண்டுகளாக ஆக்கினான். இரண்டு பேரும் அதை வறுத்து சாப்பிடுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அது சாப்பிடுவதற்க்கு ஒவ்வாததாக இருந்தது.

மேலும் மீவ்ஸ் நீதிமன்றத்தில் கூறும் போது பிராண்ட்ஸ் தன்னுடைய ரத்த வெளியேற்றத்தை அதிகப்படுத்த முயற்ச்சித்தான். அவன் தன்னை கொன்றுவிடும்படி என்னிடம் கெஞ்சினான். மேலும் பிராண்ட்ஸ் தன்னுடைய ரத்த வெளியேற்றத்தின் காரணமாக சுயநிலையற்றவனாக ஆகுவதற்க்கு சுமார் ஒன்பது மணி நேரம் ஆனது என்றும் கூறினான்.

மேலும் அவனை நான் வெட்டுவதற்கு முன்பு அவனுடைய ரத்த வெளியேற்றத்தால் அவன் இறந்துவிட்டானா என்று பரிசோதித்தேன். அவன் இறந்த பிறகு நான் என்னுடைய சமையலறையில் அவனுடைய உடம்பை தலைகீழாக தொங்கவிட்டு அவனுடைய கழுத்து பகுதியிலிருந்து சிறிது வெட்டினேன். பிறகு அதை பெப்பர் சாஸ் (Pepper, Sauce) உடனும், உருளைக்கிழங்குடனும் கலந்து சாப்பிட்டேன். இவ்வாறாக மூன்று நாட்களாக சாப்பிட்டேன். இந்த சம்பவம் எனக்கு அருவருப்பாகவே இருந்தது.

மேலும் பிராண்ட்ஸ்காகவும், எனக்காகவும் இறைவனிடம் பிரார்த்தித்தேன். மீவ்ஸ் நேற்று தன்னை மாதிரி மனிதனை சாப்பிடுவதற்க்கு எண்ணம் உள்ளவர்கள் சைக்கோலாஜிஸ்ட்டை தொடர்ப்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான்.

Saturday, January 28, 2006

குஷ்புவுக்கு வந்த சோதனை

எனது முகத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆபாசமாக புகைப்படம் வெளியிட்டுள்ள மேக்ஸிம் ஆங்கிலப் பத்திரிக்கையை சும்மா விட மாட்டேன். மான நஷ்ட ஈடு வழக்கு கண்டிப்பாக தொடரப்படும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்திற்கு மன்னிப்பு கேட்க வந்த தங்கர்பச்சானை ஒருமையில் அழைத்தும், 500 ரூபாய் கூட இல்லாத நீயெல்லாம் ஒரு டைரக்டரா என்று கோபத்துடன் கேட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் குஷ்பு.

இந்த சர்ச்சை முடிவதற்குள்ளாகவே அவர் ஒரு பெரிய இம்சையில் சிக்கிக் கொண்டார். பெண்களின் கற்பு நிலை குறித்துப் பேசப் போக தமிழகமே குஷ்புவை தாளித்துத் தள்ளி விட்டது. கோவில் கட்டி கும்பிட்ட ரசிகர்கள் ஊர் ஊராக அவரது உருவபொம்மையை கொளுத்தினர்.

ஒரு வழியாக இந்தப் பிரச்சினை இப்போது தான் ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் குஷ்பு. லண்டனை மையமாகக் கொண்ட மேக்ஸிம் என்ற ஆண்களுக்கான இதழில், குஷ்புவின் நீச்சல் உடைப் படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இது குஷ்புவின் படம் அல்ல, குஷ்புவின் முகத்தை, வேறு ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் உடலோடு இணைத்து கிராபிக்ஸ் மூலம் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக குஷ்புவும், அவரது கணவர் சுந்ததரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தனது புகைப்படத்தை தவறான முறையிலும் கேவலமாகவும், ஆபாசமாகவும் பயன்படுத்தியதற்காக மேக்ஸிம் பத்திரிக்கை மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து அவர் கூறுகையில், நான் திருமணமான பெண், இரண்டு குழந்தைகளுக்குத் தாய். எனக்கென்று பல பொறுப்புகள் உள்ளன. இப்போது தான் ஒரு பிரச்சினையிலிருந்து மீண்டு வந்துள்ளேன்.

இந்த நிலையில் எனது முகத்தை தவறாகப் பயன்படுத்தி ஆபாசமான ஒரு படத்தை மேக்ஸிம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இது எனது மனதை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. எனது பெயரை கேவலப்படுத்தி விட்டார்கள்.

சம்பந்தப்பட்ட பத்திரிக்கையிலிருந்து என்னிடம் பேசினார்கள். மன்னிப்பு கேட்பதாகவும், அதுதொடர்பான மன்னிப்பை அடுத்த இதழில் வெளியிடுதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் அதை நான் ஏற்கப் போவதில்லை. பொதுமக்கள் மத்தியில் என்னைப் பற்றிய தவறான கருத்தை பரப்பும் வகையில் இந்த புகைப்படம் வெளியிட்டுள்ளது. இதை நான் சும்மா விடப் போவதில்லை. மேக்ஸிம் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன். மேற்கொண்டு வேறு சில நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றார் குஷ்பு.

Friday, January 20, 2006

போடுங்க சார் ஓட்டு

தமிழ் நாட்டில் சட்ட மன்ற தேர்தல் களம் வெகுவாக சூடு பிடித்துக்கொண்டிருக்க ஒருவரையொருவர் தாக்கி பிரச்சாரங்கள் செய்வதில் எந்த வகையிலும் குறைவில்லை.

ஏற்கனவே அறியப்பட்ட மாபெரும் கட்சிகளான தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி ஆகிய இரண்டில் ஒன்றுதான் தேர்தலில் வெற்றி பெற்று வருவதையும், தேர்தல் நடப்பதற்கு முன்னால் தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என பல வாக்குறுதிகளை வெளியிட்டு, மக்களை ஏமாற்றி, வெற்றி பெற்ற பின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலும் கண்டு கொள்ளாமல் (பெயருக்கு ஒன்றிரண்டை செய்து விட்டு) தன்னுடைய சுய இலாபத்தை முன்னோக்கி செல்வதையே நாம் கண்கூடாக காண்கின்றோம்.

இவ்வாறு இரண்டு மாபெரும் அணிகள் முட்டி மோதிக்கொண்டிருக்க புதிதாக நடிகர் விஜயகாந்தால் ஆரம்பிக்க பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகமும் (தே.மு.தி.க.) தனது பங்கிற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. தே.மு.தி.க. வின் தலைவர் விஜயகாந்த் அளித்த வாக்குறுதிகளில் சில: "கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 2 கட்சிகளுக்கு மாறி மாறி வாய்ப்பு அளித்து விட்டீர்கள். எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தந்து பாருங்கள். லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்கி காட்டுகிறேன். கிராமங்களை நகரங்களாக மாற்றுவோம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்படும். ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு வந்து சேரும்".

இரண்டு மாபெரும் கட்சிகளுக்கும் ஓட்டு போட்டு ஓய்ந்து போய்விட்டோம், இந்த முறை இவருக்கும் (தே.மு.தி.க.) ஒரு வாய்ப்பு கொடுத்து பார்த்தாலென்ன?

தமிழ்மண வாசகர்களின் கருத்தினை எதிர்நோக்கும்.

இளவரசன்
(ஏற்கனவே இட்ட பதிவு காணாமல் போனதினால் மீண்டும் பதிந்துள்ளேன்.)

Saturday, January 14, 2006

ஹஜ் பயணிகள் மரணம்: கருணாநிதி இரங்கல்

ஹஜ் புனிதப் பயணத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 354 யாத்ரிகர்கள் உயிரிழந்ததற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், துயர சம்பவத்தில் சொந்த பந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆர்க்காடு இளவரசர் இரங்கல்: புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகர்கள், எவ்விதம் தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை முன்கூட்டியே முறையாக சொல்லிக் கொடுத்திருந்தால், இத்தகைய நெரிசல் சம்பவம் நிகழ்வதைத் தவிர்த்திருக்க முடியும்.
அவசர கதியில் கடமையை நிறைவேற்றி உடனடியாக நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஐந்து நாளில் எப்போது வேண்டுமானாலும், தங்களது கடமையை நிறைவேற்றலாம்.
இதை அனைவரும் உணர்ந்தாலே இத்தகைய உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும். நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். இவ்வாறு ஆர்க்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி தெரிவித்துள்ளார்.

Tuesday, January 10, 2006

கருணாநிதி படத்தில் ஆபாச பாடல்கள்: திமுக பெண் கவிஞர் வேதனை

திமுக தலைவர் கருணாநிதி கதை, வசனம் எழுதியுள்ள 'பாசக்கிளிகள்' திரைப்படம் பொங்கலன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் வைரமுத்து எழுதியுள்ள பாடல் வரிகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக திமுகவைச் சேர்ந்த பெண் கவிஞரும், சென்சார் போர்டு உறுப்பினருமான நிர்மலா சுரேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நிர்மலா சுரேஷ், ஆபாசமாக கவிதைகள் எழுதி புகழ்பெறும் நோக்கத்தில் சில பெண் கவிஞர்கள் உருவாகி உள்ளனர். அவர்கள் எழுதிய கவிதைகளின் தலைப்பைக் கூட படிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஆபாசம் நிறைந்துள்ளது என்றார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதியுள்ள பாசக்கிளிகள் படத்தின் பாடல் வரிகள் ஆபாசமாக அமைந்துள்ளன. அதனால்தான் அந்தப் படத்தின் தணிக்கைக் குழுவில் இடம்பெறுவதை நான் தவிர்த்து வருகிறேன் என நிர்மலா சுரேஷ் தெரிவித்தார்

மூலநோயை தடுக்க...

"ஹதயோகி' ஜி.டி.அன்பரசன்

போஜன வாயில் போடுகின்ற உணவு நல்லதாகவும், முறையாகவும் இருந்தால் ஆசனவாயில் வருகின்ற அநேக வியாதிகளைத் தடுக்கலாம்.
உடலின் கழிவு மண்டலத்தில் உணவின் மாறுபாட்டால் பல்வேறு சிக்கல்கள் உண்டாகி அதுவே மலச்சிக்கலாக மாறுகிறது.

மலம் சரியாக வெளியேற்ற முடியாமல் அடிவயிற்றில் அழுத்தத்தோடு முக்கி மலத்தை வெளித்தள்ள முயற்சி செய்வதாலும், அடிவயிற்றில் அதிக உஷ்ணம் தங்கிவிடுவதாலும், மூலாதாரப்பகுதி சூடாகி மூலநோயை ஏற்படுத்துகிறது.

இரத்தம் சேர்ந்து மலம் வெளிவந்தால் இரத்தமூலம், ஆசன வாயின் உள்தசை வெளியே வந்தால் வெளிமூலம், மலத்துவாரத்தினுள் இரணமாகி எரிச்சலும், புண்ணும் ஆகிவிட்டால் அது உள்மூலம் என பலவகை மூல நோய்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படை காரணம் மலச்சிக்கல் தான்.
மலச்சிக்கல் -மூலநோய் -காரணம்: பரோட்டா, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ் போன்ற மாவுப் பொருள்களான உணவுகளை அதிகமாக வாரம் முழுவதும் உண்பதும், அசைவ உணவு, ஃபாஸ்ட் ஃபுட் போன்றவைகளை சுவைக்காக விரும்பி உண்பதாலும், ஜீரண உறுப்புகளுக்கு அதிக வேலைப்பளு ஏற்பட்டு, வெப்பம் அதிகமாகி மலம் இறுகுகிறது.
எளிதில் ஜீரணமாகக்கூடிய பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதால் மலச்சிக்கல் வருகிறது. மேலும், ஒரே இடத்தில் பலமணி நேரம் அமர்ந்திருப்பதாலும், நைலான், பாலியெஸ்டர் உள்ளாடைகளை அணிவதாலும், காற்றோட்டமில்லாத இடத்தில் வசிப்பதாலும் அடிவயிறு அதிக வெப்பமடைகிறது.
பேக்கரி பொருள்கள் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மையுள்ளவை. இரவில் அதிக நேரம் கண்விழிப்பதும், போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், உணவை நன்கு வாயில் அரைத்து உமிழ்நீருடன் கலந்துண்ணாமல் இருப்பதும் மலச்சிக்கலுக்கு ஒரு காரணம்.
மலச்சிக்கல் தொடர்ந்து இருந்தால் மனதுள் அதிக சிக்கல்கள் வரும். ஜீரண உறுப்புகளாகிய இரைப்பை, கல்லீரல், கணையம், பித்தப்பை, சிறுகுடல் போன்றவற்றிலிருந்து சுரக்கும் செரிமான திரவநீர் சரியாக சுரக்கவில்லையென்றாலும் மலச்சிக்கல் உண்டாகும்.
ஒரு நாளில் உண்ணும் உணவின் மொத்தப்பங்கில் நான்கில் ஒரு பங்கு கழிவு பொருளான மலமாக வெளியே வரவேண்டும். உண்பது மட்டும் அதிகமாக இருந்து அதன் கழிவு வெளியேறாமல் இருந்தால் அவை மலக்குடலில் சேர்ந்து இறுக்கமாகி நோய்க்கிருமிகளை உண்டாக்கும். இதன் விளைவாக பசியின்மை, தலைவலி, குடல்வால்வு நோய், கண்ணோய்கள், குடல் புற்று, மன அழுத்தம், வயிற்றுவலி, மாதவிடாய் கோளாறு போன்ற நோய்களைத் தோற்றுவிக்கும்.
நாள்பட்ட மலம் குடலுக்குள் இருக்கும் போது அதில் நச்சுத்தன்மை ஏற்பட்டு இரத்தத்தோடு கலந்து தோல் நோய்களை உண்டாக்கும். மது அருந்துதல், போதைப் பாக்கு, புகைப்பிடித்தல் இவைகளாலும் ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு மலச்சிக்கல் மூலநோய் உருவாகிறது.
மலச்சிக்கல் -மூலநோயை முற்றிலும் தடுக்க...: உணவில் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காரட், பயறு வகைகள், ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், அத்திப்பழம் போன்றவைகளை தினசிரி சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் 75 சதவீத அளவு காய்கறி, கீரைவகைகள், பழங்களையும், 25 சதவீதம் தானிய வகைகளையும் சேர்க்க வேண்டும். உணவு உண்ணும் போது தேவையான அளவு நீரை அருந்துங்கள்.
தினசரி சரியான நேரத்தில் மலம் கழிக்க பழக வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இளம் சூடான நீரை காலையில் வெறும் வயிற்றில் சுமார் 250 மில்லி அளவு அருந்தி விட்டு, சுமார் இருபது நிமிடங்களுக்குப் பின் வயிற்றின் அடியில் அழுத்தத்தை மலத்தூண்டல்களை ஏற்படுத்தும் சாசாங்க வணக்க ஆசனம், பாம்பு ஆசனம், அபான வாயு நிவர்த்தி ஆசனம், வெட்டுக்கிளி ஆசனம் ஆகிய எளிய யோகாசனப் பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்தால் மலச்சிக்கல் தீரும்.
யோகக் கிரியாவிலுள்ள "பஸ்தி' என்னும் மலக்குடல் சுத்தி பயிற்சியை வாரம் ஒரு முறை செய்யலாம். (பஸ்தி -ஆசன வாய் வழியாக குளிர்ந்த நீரை செலுத்தி இறுகிய மலத்தை இளக வைத்து வெளியேற்றும் முறை).
இரவில் படுப்பதற்கு முன்னர் சுத்தமான விளக்கெண்ணெயுடன், பிஞ்சு கடுக்காய் தூளை ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து குழைத்து உண்டால் காலையில் மலம் இளகி வரும். மூலச்சூடும் குறையும். வட்டமான பாத்திரத்தில் இடுப்பும், அடி வயிறும் படும்படி 10 நிமிடம் குளிர்ந்த நீரில் இருந்தால் சூடு குறையும்.
மலச்சிக்கல் -மூலநோயை முற்றிலும் தடுக்க: தினசரி உகந்த உணவு, எளிய யோகாசனப் பயிற்சி, போதுமான அளவு தூக்கம், மன அழுத்தம் மற்றும் கவலை இன்மை, சரியான நேரத்தில் மலம் கழித்தல் போன்றவற்றாலும் தடுக்கலாம்.

சிகரெட் விளம்பரம்: மன்னிப்பு கேட்டார் அமிதாப்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்துடன் ஒரு டிஜிட்டல் பேனர் விளம்பரம் கோவா தலைநகர் பனாஜி நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சிகரெட் பிடிப்பதற்கு எதிரான அமைப்பு ஒன்று அமிதாப்புக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து அந்த அமைப்பிடம் அவர் மன்னிப்பு கேட்டார்.
அந்த அமைப்புக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நான் 'பேஃமிலி' என்னும் இந்தி திரைப்படத்தில் மும்பை தாதாவாக நடித்திருந்தேன். அதில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி வரும். அதிலிருந்து ஒரு புகைப்படத்தை அந்த விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
ஆன்கர் எலக்ட்ரிக் ஸ்விட்ச் கம்பெனி அந்த விளம்பர பேனரை நிறுவியுள்ளது. நான் புகைப்பிடிப்பதையும் ஆதரிக்கவில்லை. ஆன்கர் நிறுவனத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. எனக்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
அந்த விளம்பரம், மக்களையும் சிகரெட் எதிர்ப்பு அமைப்புகளையும் புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
இக்கடிதத்தை பனாஜியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிகரெட் ஒழிப்பிற்கான தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் சேகர் சால்கர் வெளியிட்டார்.

நன்றி: தினமணி