தமிழ் நாட்டில் சட்ட மன்ற தேர்தல் களம் வெகுவாக சூடு பிடித்துக்கொண்டிருக்க ஒருவரையொருவர் தாக்கி பிரச்சாரங்கள் செய்வதில் எந்த வகையிலும் குறைவில்லை.
ஏற்கனவே அறியப்பட்ட மாபெரும் கட்சிகளான தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி ஆகிய இரண்டில் ஒன்றுதான் தேர்தலில் வெற்றி பெற்று வருவதையும், தேர்தல் நடப்பதற்கு முன்னால் தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என பல வாக்குறுதிகளை வெளியிட்டு, மக்களை ஏமாற்றி, வெற்றி பெற்ற பின் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலும் கண்டு கொள்ளாமல் (பெயருக்கு ஒன்றிரண்டை செய்து விட்டு) தன்னுடைய சுய இலாபத்தை முன்னோக்கி செல்வதையே நாம் கண்கூடாக காண்கின்றோம்.
இவ்வாறு இரண்டு மாபெரும் அணிகள் முட்டி மோதிக்கொண்டிருக்க புதிதாக நடிகர் விஜயகாந்தால் ஆரம்பிக்க பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகமும் (தே.மு.தி.க.) தனது பங்கிற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. தே.மு.தி.க. வின் தலைவர் விஜயகாந்த் அளித்த வாக்குறுதிகளில் சில: "கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 2 கட்சிகளுக்கு மாறி மாறி வாய்ப்பு அளித்து விட்டீர்கள். எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு தந்து பாருங்கள். லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்கி காட்டுகிறேன். கிராமங்களை நகரங்களாக மாற்றுவோம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்படும். ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு வந்து சேரும்".
இரண்டு மாபெரும் கட்சிகளுக்கும் ஓட்டு போட்டு ஓய்ந்து போய்விட்டோம், இந்த முறை இவருக்கும் (தே.மு.தி.க.) ஒரு வாய்ப்பு கொடுத்து பார்த்தாலென்ன?
தமிழ்மண வாசகர்களின் கருத்தினை எதிர்நோக்கும்.
இளவரசன்
(ஏற்கனவே இட்ட பதிவு காணாமல் போனதினால் மீண்டும் பதிந்துள்ளேன்.)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment