எனது முகத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆபாசமாக புகைப்படம் வெளியிட்டுள்ள மேக்ஸிம் ஆங்கிலப் பத்திரிக்கையை சும்மா விட மாட்டேன். மான நஷ்ட ஈடு வழக்கு கண்டிப்பாக தொடரப்படும் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்திற்கு மன்னிப்பு கேட்க வந்த தங்கர்பச்சானை ஒருமையில் அழைத்தும், 500 ரூபாய் கூட இல்லாத நீயெல்லாம் ஒரு டைரக்டரா என்று கோபத்துடன் கேட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் குஷ்பு.
இந்த சர்ச்சை முடிவதற்குள்ளாகவே அவர் ஒரு பெரிய இம்சையில் சிக்கிக் கொண்டார். பெண்களின் கற்பு நிலை குறித்துப் பேசப் போக தமிழகமே குஷ்புவை தாளித்துத் தள்ளி விட்டது. கோவில் கட்டி கும்பிட்ட ரசிகர்கள் ஊர் ஊராக அவரது உருவபொம்மையை கொளுத்தினர்.
ஒரு வழியாக இந்தப் பிரச்சினை இப்போது தான் ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் குஷ்பு. லண்டனை மையமாகக் கொண்ட மேக்ஸிம் என்ற ஆண்களுக்கான இதழில், குஷ்புவின் நீச்சல் உடைப் படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இது குஷ்புவின் படம் அல்ல, குஷ்புவின் முகத்தை, வேறு ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் உடலோடு இணைத்து கிராபிக்ஸ் மூலம் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக குஷ்புவும், அவரது கணவர் சுந்ததரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தனது புகைப்படத்தை தவறான முறையிலும் கேவலமாகவும், ஆபாசமாகவும் பயன்படுத்தியதற்காக மேக்ஸிம் பத்திரிக்கை மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து அவர் கூறுகையில், நான் திருமணமான பெண், இரண்டு குழந்தைகளுக்குத் தாய். எனக்கென்று பல பொறுப்புகள் உள்ளன. இப்போது தான் ஒரு பிரச்சினையிலிருந்து மீண்டு வந்துள்ளேன்.
இந்த நிலையில் எனது முகத்தை தவறாகப் பயன்படுத்தி ஆபாசமான ஒரு படத்தை மேக்ஸிம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இது எனது மனதை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. எனது பெயரை கேவலப்படுத்தி விட்டார்கள்.
சம்பந்தப்பட்ட பத்திரிக்கையிலிருந்து என்னிடம் பேசினார்கள். மன்னிப்பு கேட்பதாகவும், அதுதொடர்பான மன்னிப்பை அடுத்த இதழில் வெளியிடுதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் அதை நான் ஏற்கப் போவதில்லை. பொதுமக்கள் மத்தியில் என்னைப் பற்றிய தவறான கருத்தை பரப்பும் வகையில் இந்த புகைப்படம் வெளியிட்டுள்ளது. இதை நான் சும்மா விடப் போவதில்லை. மேக்ஸிம் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன். மேற்கொண்டு வேறு சில நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றார் குஷ்பு.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
என்ன சார்,
எதோ இயற்கை வைத்தியம்னு பார்த்தா ,குஷ்பூ விஷயமா இருக்கே!
தலைப்பிற்கும் வைத்தியத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லையே!
உங்க பதிவு தினமலரில் அறிவியல் ஆயிரம் பகுதியில் வந்திருக்கிறது
வாழ்த்துக்கள்
Post a Comment