Tuesday, January 10, 2006

கருணாநிதி படத்தில் ஆபாச பாடல்கள்: திமுக பெண் கவிஞர் வேதனை

திமுக தலைவர் கருணாநிதி கதை, வசனம் எழுதியுள்ள 'பாசக்கிளிகள்' திரைப்படம் பொங்கலன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் வைரமுத்து எழுதியுள்ள பாடல் வரிகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக திமுகவைச் சேர்ந்த பெண் கவிஞரும், சென்சார் போர்டு உறுப்பினருமான நிர்மலா சுரேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நிர்மலா சுரேஷ், ஆபாசமாக கவிதைகள் எழுதி புகழ்பெறும் நோக்கத்தில் சில பெண் கவிஞர்கள் உருவாகி உள்ளனர். அவர்கள் எழுதிய கவிதைகளின் தலைப்பைக் கூட படிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஆபாசம் நிறைந்துள்ளது என்றார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதி வசனம் எழுதியுள்ள பாசக்கிளிகள் படத்தின் பாடல் வரிகள் ஆபாசமாக அமைந்துள்ளன. அதனால்தான் அந்தப் படத்தின் தணிக்கைக் குழுவில் இடம்பெறுவதை நான் தவிர்த்து வருகிறேன் என நிர்மலா சுரேஷ் தெரிவித்தார்

No comments: