ஹஜ் புனிதப் பயணத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 354 யாத்ரிகர்கள் உயிரிழந்ததற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், துயர சம்பவத்தில் சொந்த பந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆர்க்காடு இளவரசர் இரங்கல்: புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகர்கள், எவ்விதம் தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை முன்கூட்டியே முறையாக சொல்லிக் கொடுத்திருந்தால், இத்தகைய நெரிசல் சம்பவம் நிகழ்வதைத் தவிர்த்திருக்க முடியும்.
அவசர கதியில் கடமையை நிறைவேற்றி உடனடியாக நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஐந்து நாளில் எப்போது வேண்டுமானாலும், தங்களது கடமையை நிறைவேற்றலாம்.
இதை அனைவரும் உணர்ந்தாலே இத்தகைய உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும். நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். இவ்வாறு ஆர்க்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
தலைப்பை "ஹஜ் பயணிகள் மரணம்" என்று எழுதுங்கள். மரணம் சாவு என்ற இரண்டுமே ஒரே நிகழ்வை குறிப்பவை என்றாலும் இப்படி தலைப்பை படிப்பதற்கு என்னவோ போல் இருக்கிறது.
Post a Comment